பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 0 திருவாசகம் சில சிந்தனைகள்-5 ஒன்றோ இரண்டோ குறைவதாயின், என்ன நிகழும் என்பதையே அடிகளார், தடமுலையார் தங்கள் மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடக்க நேரிடும் என்கிறார். இதற்கொரு காரணமுண்டு. மனிதன் காமவசப்படும்போது மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயற்படும். இதனை மாற்றி வேறு வழியில் செலுத்தத் தொடங்கினால், ஒன்றைமட்டும் செலுத்திப் பயனில்லை. மகளிர் மயக்கத்தில் மனம், மொழி, மெய் என்ற மூன்றுக்கும் ஒரே இடத்தில் உணவு கிடைக்கிறது. இறை வழிபாட்டில் இந்த மூன்றையும் ஒருசேரச் செலுத்தினால் அன்றி அது முழுமைத்தன்மை பெறுவதில்லை. மேலே கூறிய இரண்டு வழிகளில் இறைவழிபாட்டை விட்டுவிட்டு, தையலார் மையலில் மயங்கிக் கிடந்த தம்மையும் கருணை வள்ளலாகிய குருநாதர் திருவடிக் காட்சி தந்து ஆட்கொண்டது ஓர் அற்புதம் என்கிறார் அடிகளார். 576. ஊசல் ஆட்டும் இவ் உடல் உயிர் ஆயின. இரு வினை அறுத்து என்னை ஒசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கிப் பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால் ஆசை தீர்த்து அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே 8 இப்பாடலின் முதலடி ஊசலாட்டும் இவ்வுடல் உயிர் ஆயின. இருவினை அறுத்து என்று தொடங்குகின்றது. இருவினை என்பது, நல்வினை-தீவினை என்ற இரண்டையும் குறிக்குமேனும் இவை இரண்டுமே பிறவியை உண்டாக்குவதற்குரிய விதைகளாகும். உயிரைப் பற்றியிருக்கும்