பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 43 இந்த இரு வினைகளும் பிறவிதோறும் தொடர்ந்து வருகின்றன. அவை இறைவன் ஆணைப்படி இந்த உயிரை ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு உடம்பிற்குள் புகுத்துகின்றன. அவ்வுடம்பினுள் இருக்கவேண்டிய வினை அளவு முடிந்தவுடன் அந்த உடம்பைவிட்டு உயிர் புறப்பட்டு விடுகிறது. புறப்பட்ட உயிரை விடுதலையடையவிடாமல் மற்றோர் உடம்பிற்குள் இவ்வினைகள் செலுத்துகின்றன. ஆகவே, இந்த உயிரை ஊஞ்சல் என்று உருவகிக்கிறார் அடிகளார். இந்த உடம்பு-அந்த உடம்பு, அந்த உடம்பு- இந்த உடம்பு என்று மாறிமாறி இந்த உயிர் சென்று தங்குவதால் இதனை ஊசலாட்டு என்கிறார் அடிகளார். இருவினை இருக்கின்றவரையில் இந்த ஊசலாட்டத்தை நிறுத்த முடியாது. எனவே, அடிகளாரின் உயிரை, இந்த ஊசலாட்டிலிருந்து விடுவிக்கக் கருதிய இறைவன், அதற்கு மூலகாரணமாகிய இருவினையை அறுத்தான் என்கிறார். 'ஒசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன்' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். இதில் வரும் ஒசை என்பதற்குச் சொல் என்று பொருள் கண்டு, சொல்லாலாகிய கல்வி என நீட்டி, அக்கல்வியறிவால் உணருதற்கு அரியவன் என ஒரு சாரார் பொருள் கண்டுள்ளனர். இந்த உரையை ஏற்றுக்கொள்வதற்கு, 'உணர்வார்க்கு என்றசொல் இடையூறாக நிற்கின்றது. கல்வி அறிவால் எந்த ஒன்றையும் அறிய முடியுமே தவிர, உணர முடியாது. எனவே, ‘ஓசையால் உணர்வார்க்கு' என்பதற்கு வேறு பொருள் காண்டல் தேவைப்படுகிறது. ஒசை என்ற சொல் ஒலியோடு தொடர்புடையதாகும். வரம்புக்கு உட்பட்ட ஒசையை ஒலியென்றும், வரம்புக்கு உட்படாததை ஒசையென்றும் கொள்ளலாம். நான்கு சுரங்களுக்கு உட்பட்டு வருகின்ற வேதத்தை ஒலி சிறந்த