பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 • திருவாசகம் சில சிந்தனைகள்-5 வேதம் என ஆளுடைய அரசு குறிக்கின்றார், ஒதிய ஞானமும் (திருமுறை : 4:92-17) என்று தொடங்கும் பாடலில் ஒலிசிறந்த வேதமும்’ என்று கூறுகின்றார். எனவே 'ஒசையால் உணர்வார்க்கு உணர்வரியன்’ என்ற தொடருக்குக் குறுகிய அதிர்வுகளையுடைய மந்திரங்களை விடாமல் ஜெபிப்பதன் மூலம் அவனை உணரமுடியும் என்று நினைப்பவர்கட்கு அவர்கள் உணர்வுக்கு அப்பாற்பட்டவனாய் உள்ளான் என்பது பொருளாகும். பொதுவாக மந்திரங்கள் மூலம் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று நம்புகிறவர்கள் அன்றும் உண்டு; இன்றும் உண்டு. இவர்கள் நம்பிக்கை ஒரளவிற்கு உண்மையானதுதான். அட்டமாசித்திகளைக்கூட எளிதாகக் கைவரப்பெறலாம். இந்த அளவில்தான் மந்திரங்களின் எல்லை முடிவடைகிறது. எனவே, இந்த மந்திரங்களைப் பயன்படுத்தி இறைவனை உணரமுடியும் என்ற நம்பிக்கை இடைக்காலத்தில் வலுப் பெற்றிருந்தது என்பது உண்மைதான். அனுபவ ஞானியாகிய அடிகளார் குருநாதரைத் தரிசித்தார். அந்தக் குருநாதர் தம்முட் புகுவதை அறிவினால் அறிந்தார்; உணர்வினாலும் உணர்ந்தார். எந்த மந்திரமும் செய்யமுடியாத ஒரு செயலை. அதாவது அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றும் செயலைக் குருநாதர் செய்தார் என்பதை அறியவும் செய்தார்; உணரவும் செய்தார். இவ்வளவு அனுபவங்களைப் பெற்ற அடிகளார் ஒன்றைச் சொல்வாரேயானால், நாம் அதனைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. ஒசையால் உணர்தற்கு அரியவனாகிய அவன் 'உணர்வு தந்து ஒளியாக்கி, பாசம் ஆனவை பற்றறுத்தான்' என்று கூறுகிறார்.