பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 45 'ஒசையால் உணர்தற்கு அரியவன்' என்றார்; அடுத்து அவரே உணர்வு தந்து' என்று கூறுகிறார். ஈதென்ன விந்தை! இவை ஒன்றுக்கொன்று முரணானவை. சற்று நின்று நிதானித்தால் அவர் கூற்றிலுள்ள நுணுக்கம் நன்கு விளங்கும். 'ஒசையால் உணர்வார்க்கு அரியவன்' என்பதில் உணர முயன்ற கர்த்தா மனிதனாவான். 'உணர்வுதந்து' என்று கூறும்போது உணர்வைத் தருதலுக்குக் கர்த்தா இறைவன் ஆவான். தான் கர்த்தாவாக நின்று மனிதன், மந்திரங்களை உருவேற்றி, தன் உணர்வுக்குள் இறைவன் சிக்கவேண்டும் என்று நினைத்தால், அது நடவாத காரியம். இதனையே அடிகளார் ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன்' என்கிறார். மறுதலையாக அடியவனுடைய உணர்வுக்குள் அகப்பட்டுக்கொள்ள வேண்டுமென்று அவனே நினைந்தால் அதையும் யாரும் தடுக்கமுடியாது. அதனையே அடிகளார் அவனே விரும்பி உணரும் உணர்வு தந்து' என்கிறார். பாடலின் நான்காவது அடியில் காணப்படும் ஆசைதீர்த்து என்ற தொடர் கவனமாகப் பொருள் கொள்ள வேண்டிய ஒன்றாகும். வாலாயமாகப் பொருள்கொள்கின்ற முறையில் பற்று, பாசம் ஆகியவற்றைப் போக்கினான் என்பதோடு சேர்த்து, மனத்தில் தோன்றும் ஆசைகளையும் போக்கினான் என்று பொருள் கொள்வது சரியாகப்படவில்லை ஆசை அறுத்து அல்லது ஆசை அழித்து என்று அடிகளார் கூறியிருப்பின் இப்பொருள் பொருந்தும். ஆசை தீர்த்து' என்றல்லவா கூறியிருக்கிறார். ஆசைப்பட்டது கிடைத்தவுடன் ஆசை தீர்ந்தது என்று சொல்லுகிறோம். இந்த அடிப்படையில் பாடலின் நான்காவது அடியைக்