பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ) திருவாசகம் சில சிந்தனைகள்-5 கொண்டு கூட்டுச் செய்துகொண்டால் பொருள் நன்கு விளங்கும். அடியார் அடிக்கூட்டி ஆசைதீர்த்த அற்புதம் அறியேனே என்று கொண்டால் அடியரோடு கூடவேண்டும் என்ற அடிகளாரின் நீண்டநாள் ஆசையைப் பெருந்துறைக் குருநாதர் தீர்த்து வைத்த அற்புதம் தெரியவரும். 577. பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய்போல இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர்க் கழல் காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே 9. "பொச்சையான இப்பிறவி என்பது அடர்த்தியும், இருளும் துன்பமும் நிறைந்த காடுபோன்ற இப்பிறப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட குறிக்கோளோ வரையறையோ இல்லாமல் இங்குமங்கும் அலைகின்ற நாய்போல, பெண்கள் விருப்பத்தை நிறைவேற்றுமுகமாக இங்குமங்கும் தாம் அலைந்து திரிந்ததாக அடிகளார் கூறுகிறார். அப்படியான தம்மையும் ஆண்டுகொண்டது அற்புதம் என்கிறார். 578. செறியும் இப் பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும் கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை இறைவன் எம்பிரான் எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே 10