பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 47 மாபெரும் கல்வியாளராகிய அடிகளார், இப்பிறப்பு நிலையில்லாதது, அடுத்தடுத்து வருவது என்பதை அறிந்திருத்தல் வேண்டும். இதனை அறிய இயல்பான அறிவும் கல்யறிவுமே போதுமானவை. இவை இரண்டையும் பெற்றிருந்தும், தையலார் மையலில் மயங்கிநின்று, அவர்களுடைய "கிறியும் (பொய்ம்மை, வஞ்சனை) கீழ்மையும் அறிய முற்படாமல், வாழ்ந்தேன் என்கிறார். இருந்தபொழுதும் குருநாதர் அவற்றைப் பொருட்படுத்தாமல் "இணை மலர்க் கழல்காட்டி ஆண்டுகொண்டார். அம்மட்டோடு இல்லை. பழைய வாழ்க்கையிலுள்ள குறைபாட்டை அறியும் அறிவையும் தந்தார் என்கிறார். இப்பாடலில் வரும் 'அறிவு தந்து' என்பது திருவாசகத்தில் அதிகம் காணப்படாத பிரயோகம் ஆகும். அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை அடிகளார் நன்கு அறிந்தவர் ஆவார். எனவே, இங்கு அறிவு தந்து என்ற அவருடைய தொடருக்குத் தையலார் மயக்கம் நெறிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்ற அறிவைத் தந்து என்று பொருள் கொள்வதே சிறப்புடையதாகும்.