பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. சென்னிப் பத்து (சிவ விளைவு) இப்பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் சென்னி என்று வருதலால் சென்னிப் பத்து என்ற பெயர் கொடுக்கப்பெற்றுள்ளது. சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே, சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே, சேவடிக்கண் நம் சென்னி மன்னிப் பொலியுமே, சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே என்ற முறையில் பாடல்கள் முடிகின்றன. சேவடிக்கண் என்ற சொல்லிலுள்ள கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபு, இடம் என்ற பொருளைத் தருவதால் இந்தக் கண் உருபைச் சேவடிக்கே ஏற்றிப் பலரும் பொருள் கண்டுள்ளனர். இடத்து என்றும் பொருளுடைய இந்தக் கண்ணுருபைச் சென்னிக்கும் ஏற்றலாம். திருப்பெருந்துறையில் குருநாதர் பூமியில் பதித்திருந்த தம் திருவடிகளை அடிகளார் வணங்கியவுடன் அடிகளாரின் திருமுடிமேல் வைத்தருளினார் என்று Η 16ί) இடங்களிலும் கூறப்பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் கண்ணுருபைச் சென்னிக்கு ஏற்றி, திருவடி, சென்னிக்கண் மன்னி மலருமே, என்று பொருள் கொள்வதில் தவறொன்றும் இல்லை. மலருமே என்று கூறியதால் சென்னியில் வைப்பதற்குமுன் அது கூம்பியிருந்தது, சென்னிக்கண் வைத்ததால்தான் அது மலர்ந்தது என்று பொருள்செய்து இடர்ப்படத் தேவையில்லை.