பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னிப் பத்து-49 மலருமே, திகழுமே, பொலியுமே, சுடருமே என்ற சொற்கள், விளங்கின என்ற பொருளிலேயே ஆளப் பெற்றுள்ளன. அதாவது, சென்னிக்கண் மன்னிய சேவடிகள் விளங்கின என்ற அளவில் மேலே கூறிய சொற்கள் அனைத்தும் பொருள் தந்து நிற்பதைக் 35fTGJðTSUfTl í). இவ்வாறு பொருள் கொள்ளாமல் திருவடிக்கண் சென்னி சென்று மன்னியதால் அந்தச் சென்னி அஞ்ஞானம் முதலியவை நீங்கி மலர்வதாயிற்று என்று ; பொருள் கூறுவதிலும், பெருந் தவறொன்றுமில்லை. என்றாலும், திருவடிக்கண் சென்று நிலைபெற்ற காரணத்தால் தம் சென்னி மலர்ந்தது, பொலிந்தது, சுடர்ந்தது, திகழ்ந்தது என்றெல்லாம் அடிகளார் கூறிக்கொள்வாரா என்பது சிந்திக்கற்பாலது. இவை அனைத்தும் நடைபெற்றிருக்கலாம் என்றாலும், இவ்வளவு வெளிப்படையாகத் தம் சென்னி மலருமே, திகழுமே, பொலியுமே, சுடருமே என்றெல்லாம் அடிகளார் கூறிக் கொள்வாரா என்று நினைத்தால் இவ்வாறு பொருள் கொள்வதைவிட முதலிற் கூறிய முறையில் பொருள் கூறுவது சிறப்புடையதோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அடிகளார் திருமுடிமேல் குருநாதர் திருவடியை வைத்தது சில விநாடி நேரமே. என்றாலும், அடிகளாரைப் பொறுத்தவரையில் அந்தத் திருவடி சம்பந்தம் இருபத்துநான்கு மணிநேரமும் அடிகளார் மனத்தைவிட்டு நீங்கவேயில்லை. அந்த அடிப்படையில்தான், எல்லா நேரமும் தம் சென்னிக்கண் குருநாதர் திருவடி நிலைபெற்று (மன்னி) மலர்கின்றது, திகழுகின்றது, சுடர்கின்றது, பொலிகின்றது என்று கூறிச் செல்கிறார். மன்னி என்ற சொல் மிக ஆழமானதும், இன்றியமையாததுமர்கிய ஒரு பொருளைத் தந்துநிற்கிறது.