பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50_திருவாககம் சில சிந்தனைகள் 5 திருவடி சென்னியில் பட்டது ஒருவிநாடி நேரம்தான். அந்தத் திருவடி சம்பந்தம் நேரிடையாக நடைபெற்ற நிலை ஒருவிநாடிதான் என்றாலும், சென்னியில் வைக்கப்பெற்ற திருவடி சென்னியை விட்டு நீங்கவேயில்லை. அங்கேயே நிலை பெற்றுவிட்டது. அதை வலியுறுத்தவே ஒவ்வொரு பாடலிலும் சென்னி மன்னி நிலைபெற்று) விட்டது என்று பாடுகிறார். வாழ்க்கையில் நம்மால் பெரிதும் விரும்பப் பட்டவர்கள் மறைந்துவிட்டால்கூடப் 战jQ) நாட்கள்வரையில் அவர்கள் நம்மைவிட்டு நீங்காமல் உடனிருப்பது போன்ற பிரமை ஏற்படுவது பலருடைய அனுபவத்தில் கண்டிருக்கலாம். கேவலம் உடல் காரணமாகப் பெற்ற உறவே, நீங்கிய பிறகும் இருக்கின்றது என்பதுபோலப் பிரமையை உண்டாக்கும் என்றால் சத்திய சொரூபனின் திருவடி தம் சென்னியில் நிலைபெற்றுவிட்டது என்று அடிகளார். பேசுவதில் வியப்பொன்றுமில்லை அல்லவா? திருவடி சம்பந்தம் பெற்ற காரணத்தால், சென்னியில் முன்னர் இருந்த அஞ்ஞானம் முதலியவை நீங்கப்பெற்றது உண்மைதான். அஞ்ஞானம் நீங்கப்பெற்றதால் அது இருந்த இடத்தில் மெய்ஞ்ஞானம் நிறைந்தது என்பதும் உண்மைதான். என்றாலும் மெய்ஞ்ஞானத்தைப் பெற்று என் சென்னி மலர்ந்தது என்று அடிகளாரே கூறிக்கொள்வாரா என்பது சிந்திக்கற்பாலது. இதனை மனத்துட் கொண்டு பார்த்தால் இவ்வாறு பொருள்கொள்வதைவிடச் சென்னிக்கண் என்று முதலிற் கூறப்பெற்ற பொருளே ஏற்புடையதாகத் தெரிகிறது. சென்னி மன்னி மலருமே என்ற தொடரை வைத்துக்கொண்டு, மலர்ந்த ஒன்று காயாகிக் கனியாகி விளையும் என்று நினைத்த யாரோ ஒருவர், திருவடியைச் சிவம் என்று பொருள் கொண்டு, சிவ விளைவு' என