பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கென்னிப் பத்து_51 உட்தலைப்புத் தந்துள்ளார்போலும். வழக்கம்போல இதுவும் பொருந்தாத குழறுபடியாகவே உள்ளது. 579. தேவ தேவன் மெய்ச் சேவகன் தென் பெருந்துறை நாயகன் மூவராலும் அறி ஒன. முதல் ஆய ஆனந்த மூர்த்தியான் யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிஓனா மலர்ச் சோதியான் தூய மா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிச் சுடருமே t தேவ தேவனாகவும், மெய்ச்சேவகன்(வீரன்) ஆகவும் உள்ள ஒருவன் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற மூவராலும் அறியப்படாதவன். ஆனால், அவன் ஆனந்தமே வடிவாக உள்ளான். அப்படியிருக்க, இந்த மூவரோ தேவர்களோ அறியவில்லையென்றால் யாருமே அறியமுடியாமல் எங்கோ இருக்கின்ற ஒருவன் என்று நினைந்துவிடக்கூடாது என்பதற்காக மூன்றாவது அடியில் அவனை அறிபவர் யார் என்று விளக்கம் கூறுகிறார். அவனை அறிவதற்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. அந்த ஒன்றிருந்தால் அதனை உடையவர் ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும் (திருமுறை 6:95-10) அவனை (உணர்ந்து அனுபவிக்க முடியும், ஏன் ஓரளவு அறியவும் முடியவும். அந்த ஒன்றில்லாவிட்டால் தேவராகப் பிறந்தாலும், மூவருள் ஒருவராக இருந்தாலும் அவனை அறிய முடியாது என்ற பேருண்மையை யாவராயினும் அன்பர் அன்றி அறியொனா மலர்ச் சோதியான் என்ற அடியில் அற்புதமாக விளக்கியுள்ளார். அந்த ஒன்று என்ன என்பதை அன்பர் அன்றி என்ற சொற்களால் குறிப்பிட்டுவிட்டார். எனவே, அன்பராக இருப்பின் யாராக இருந்தாலும் அதாவது ஆவுரித்துத் தின்பவராக இருந்தாலும்கூட அவனை அறியமுடியும் என்கிறார்.