பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52-திருவாசகம் சில சிந்தனைகள்-5 இதைவிடச் சிறப்பு ஒன்றும் இந்த அடியில் உண்டு. அன்பரால் அறியப்படும் இவன் யார்? மலர்ச்சோதியான் என்றல்லவா அவனை விளக்குகின்றார். இது என்ன வேடிக்கை சோதி வடிவாகவுள்ள ஒருவனை, இமையா நாட்டமுடைய தேவர்களும், எட்டுக் கண்களையுடைய நான்முகனும், மூன்று கண்களையுடைய உருத்திரனும், தாமரை மலர்போன்ற இரண்டு கண்களையுடைய நாரணனும் ஏன் காணமுடியவில்லை? அந்த மலர்ச்சோதியை நேரிடையாகப் பார்க்க முடியாது. இந்தச் சோதியினைப் பார்க்க அன்பு என்ற கண்ணாடி தேவை. இந்தக் கண்ணாடி அணிந்தவர் யாராக இருப்பினும் அவனைக் காணமுடியும். இக்கண்ணாடி அணியாதவர் எத்தனை கண்களை உடையவராயினும் அவனைக் காணமுடியாது என்பதையே யாவராயினும் அன்பரன்றி அறியொனா மலர்ச்சோதியான் என்று பாடுகிறார். அத்தகைய பெருமானுடைய தூய மலர்போன்ற சேவடி தம் சென்னிக்கண் நிலையாகத் தங்கி மன்னி) விளங்குகிறது என்று பாடுகிறார். இங்கு சுடரும் என்ற சொல், ஒளிவிட்டு விளங்குகிறது என்ற பொருளைத் தருகிறது இந்தப் பாடல் பாடுகின்ற நேரத்தில் குருநாதர் எதிரே இல்லை. அவருடைய திருவடியும் அடிகளாரின் திருமுடி மேல் இல்லை என்றுதான் அடிகளாரைக் காண்பவர்கள் நினைக்கின்றார்கள். ஆனால், அந்தத் திருவடிகள் அடிகளாரின் திருமுடிமேல் நிலைத்துநின்று, ஒளி விடுகின்றன என்றல்லவா அடிகளார் கூறுகின்றார். சோதி வடிவானவனை இரண்டுக்கு மேற்பட்ட கண்களை உடையவர்கள்கூட ஏன் காணமுடியவில்லை? தூய அன்புக் கண்ணாடி அணியாததால்தானே? அதேபோல அடிகளாரிடத்தோ குருநாதரிடத்தோ துTய அன்பு பூண்டவர்களல்லாமல் ஏனையோருக்குச் சென்னி மன்னி மலரும் சேவடியின் சுடர் ஒளியைக் காண்பது இயலாத காரியம் என்க.