பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னிப்பத்து_53 580, அட்ட மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச் சிவலோக நாயகன் தென் பெருந்துறைச் சேவகன் மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன் வட்ட மா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 2 சிட்டன்.மேலானவன் மலர்ச்சேவடி என்று கூறியிருப்பின் எந்த மலர் என்ற ஐயம் தோன்றும். எல்லா மலர்களும் மென்மையும் அழகும் உடையன; திருவடியும் அவ்வாறே. இந்தப் பொதுத்தன்மை போக, திருவடிக்குப் பொதுவாக உவமை கூறப்பெறும் மலர், தாமரை ஆகும். ஏனைய மலர்களிலிருந்து தாமரையை வேறு பிறித்துக் காட்ட, வட்டமாமலர்' என்றார். சிவலோகம் என்ற சொல்லிற்கு முன்னர் மெய் என்ற அடைகொடுத்தது, அதற்கு மறுதலையான பொய் என்ற சொல்லிலிருந்து விலக்கு அளிப்பதற்கன்று, இங்கு மெய் என்பது 'சத்தியசொரூபம்’ என்ற பொருளைத்தரும் சொல்லாகும். நாயகன் சத்தியசொரூபன் ஆதலால் அவன் உறைகின்ற சிவலோகமும் அதே இயல்பைப் பெறுவதாயிற்று. இதனால் மெய்ச்சிவலோகம் என்றார். 581. நங்கைமீர் எனை நோக்குமின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன் தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் மங்கை மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணி கொள்வான் பொங்கு மா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னிப் பொலியுமே 3