பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னிப் பத்து-55 ஆகவேதான் இத்தமிழர் ஆண்-பெண் வேறுபாடின்றி உயிர்கள் அனைத்தையும் தலைவியாகக் கொண்டு, இறைவன் ஒருவனையே தலைவனாகக் கொண்டு பக்தியின் முதிர்ச்சியில் அகத்துறைப் பாடல்கள் பாடினர். இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியாத ஜி.யூ.போப் போன்ற திருவாசக பக்தர்கள் இதுபோன்ற பாடல்களை அடிகளார் ஏன் பாடினார் என்று புரிந்துகொள்ள முடியாமல் தவித்தனர். இப்பாடல், அடிகளார் தம்மைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு, ஏனைப் பெண்களையும் உடன் சேர்த்துக்கொண்டு தன்மைப் பன்மையில் பாடியதாகும் சகதோழிகளே! நம்முடைய நாதனாகிய சிவபெருமான் நாம் செய்யும் பணியை ஏற்றுக் கொள்கிறான். பெருந்துறையில் உள்ள பெருமான் தன்மாட்டு . அன்புசெய்யும் சில பெண்களின் வளைகளை மட்டும்தான் கவர்ந்தான். ஆனால், என்ன வேடிக்கை! நம்மைப் பொறுத்தவரையில் நம் பணிகளை ஏற்றுக்கொண்டு, வளைகளையும் கவர்ந்துகொண்டதோடு அன்றி நம் உயிர்களையும் அல்லவா கவர்ந்துவிட்டான்! அத்தகைய பெருமானுடைய திருவடி நம்முடைய தலைகளின்மேல் நிலையாகத் தங்கிப் பொலிவதைக் காண்பீர்களாக' என்கிறார். 582. பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பான் எனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடம் செய்வான் எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணி கொள்வான் வைத்த மா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே