பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56--திருவாசகம் சில சிந்தனைகள்-5 தில்லைக் கூத்தன் தன் நடனத்தை விட்டு, திருவடியைப் பிரியாத அடியார்களையும் உடனழைத்துக் கொண்டு, அந்தண வடிவில் பெருந்துறைக்கு வந்து, தமக்கு அருள்செய்த சிறப்பை இப்பாடலில் கூறுகின்றார். அடிகளாரும் பிறரும் அறியாமல் அவர்களுடைய உள்ளங்களிற் புகுந்து பணியும் கொண்டான் ஆதலின் அவனை "எத்தன்' என்கிறார். 583. மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான் வேய தோள் உமை பங்கன் எங்கள். திருப்பெருந்துறை மேவினான் காயத்துள் அமுது ஊற ஊற நீ கண்டுகொள் என்று காட்டிய சேய மா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே 5 இப்பாடலின் மூன்றாவது அடி ஆழமாகச் சிந்தித்துப் பொருள் கொள்ள வேண்டிய பகுதியாகும். - குருநாதரின் சேவடி சென்னிக்கண் மன்னித் திகழ்கின்ற காரணத்தால் இரண்டு செயல்கள் நடைபெற்றன. சென்னியில் சேவடி படுவதற்கு முன்னர் அந்த உடம்பு ஏனையோருடைய உடம்பைப்போலவே பொறி புலன்களால் கட்டுண்டு வினை வயத்ததாய், தன்முனைப்போடு கூடியதாய் இருந்தது. இது திருவாதவூரர் என்ற அமைச்சரின் உடல் அமைப்பு இருந்தவாறாகும். அந்த உடம்பில் குருதி முதல் சுக்கிலம் வரை ஊறினவே தவிர வேறு எதுவும் நிகழவில்லை. இல்லை! தவறு. அந்த உடம்பினுள் எல்லையற்ற கவலைகள், துன்பங்கள், துயரங்கள் என்பவை நூற்றுக்கணக்கில் குடியிருந்தன. திருவாதவூரரின் இத்தகைய உடம்பின் ஒரு