பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருவாசகம்_சில சிந்தனைகள்-5 584. சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம் பத்தி தந்து தன் பொன் கழல்கனே பன் மலர் கொய்து சேர்த்தலும் முத்தி தந்து இந்த மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் மத்தன் மா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 6 திருப்பெருந்துறை நாயகன் தமக்குச் செய்த பேருபகாரத்தை வரிசைப்படுத்திக் கூறுகிறார் அடிகளார். இவ்வாழ்வு வீணாகாமல் உய்வதற்குரிய பக்தியை எமக்குத் தந்தான்; அதனால் பல வகையான மலர்களைக் கொய்து அவன் திருவடிகளில் சாத்தி வழிபட்டேன். நான் செய்தது வழிபடுதலாகிய ஒரேயொரு செயலைத்தான். இந்த ஒன்றுக்குப் பதிலாக அவன் என்ன செய்தான் தெரியுமா? முதலாவதாக என் தீவினையைக் கெடுத்தான்! தீவினை நீங்கித் துய்மை அடைந்த காரணத்தால் என் சித்தத்துள் புகுந்தான்; புகுந்ததோடு நிற்கவில்லை, என்னை ஆட்கொள்ளவும் செய்தான். - பக்தியுடன் திருவடிகளில் மலரைச் சாத்திய ஒரே செயலுக்காக மேலே கூறியவற்றைச் செய்ததோடு நில்லாமல் ஊமத்தம் பூவைச் குடிய (மத்தன்) அப்பெருமான், மூவுலகுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் வீடுபேற்றில் (முத்தியில்) என்னை வைத்தான். அத்தகைய பெருமானின் திருவடி என் சென்னியில் நிலைபெற்று மலர்வதைக் காண்போமாக என்கிறார். ஒரு சில மலரைக் கொய்து அவன் திருவடிகளில் இட்ட ஒரே காரணத்திற்காக என் சித்தத்துள் புகுதல், என்னை ஆட்கொள்தல், என் தீவினை கெடுத்தல், உய்வதற்குரிய பக்தியை எனக்குத் தருதல், இறுதியாக