பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ல் திருவாசகம்_சில சிந்தனைகள்-5 இந்தச் சேவடி திறமையின் பெருக்கத்தைக் கொண்டது. திறமை பெருகிவிட்டால் அது எவ்வாறு பணிபுரியும் என்று சொல்வதற்கில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் பணிபுரியும் திறமை, வேறொரு துறைக்குப் பயன்படுவது கடினம். ஆனால், மாபெரும் ஆற்றலையுடைய இத்திருவடியின் உண்மைத் தன்மை என்ன தெரியுமா? சுடுகாட்டில் நட்டமாடிக்கொண்டே பிரபஞ்சத்தையும் நடத்திச்செல்லும் திறமையுடையது. இப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மூலையில் தனிமனிதனாக வாழ்ந்து துயர்ப்படும் துணையிலி (அறவை) ஆகிய ஒருவரை அடியார் கூட்டத்தினிடையே சென்றிருக்குமாறு செய்ய வல்லது. அம்மட்டோ அந்தத் துணையிலியின் பிறப்பை அறுக்கவும் வல்லது. நட்டமாடுவது, தனி மனிதரைக் காப்பாற்றுவது என்ற இரண்டு செயல்களையும் கண்டபிறகு இந்தத் திருவடியின் பேராற்றல் நட்ஞ் செய்யத்தான் பயன்படும்போலும் என்று யாரேனும் நினைத்தால், அவர்கள் அதன் உண்மைத் தன்மையை அறியாதவர்கள் ஆவர். பிரபஞ்சத்தை உய்வித்தல் தனிமனிதனின் பிறப்பை அறுத்தல் ஆகிய செயல்களைச் செய்த அதே திருவடிகள் காலனையும் எட்டி உதைத்து அவன் உயிரையும் போக்கும் திருவடிகளாகும். திருவடியின் பேராற்றலின் உண்மைநிலை இதுவேயாகும் 586, புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும் எழில்கொள் சோதி எம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்று என்று தொழுத கையினர் ஆகித் து மலர்க் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு வழு இலா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே 8