பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi அப்படியே கூறியுள்ளேன். இவ்வாறு சொல்வதற்குத் தொல்காப்பியத்தில் வரும் 'இறைச்சி என்ற சொல் வலிவு தந்தது. அனுபவத்திற்கு வடிவு கொடுக்கும் திருவாசகப் பாடல்கள் ஒரு கோவையாக, ஒரு வரன்முறைக்கு உட்பட்டு வருமென்று சொல்வதற்கில்லை. கோவையும், வரன் முறையும் வேண்டுமானால், அங்கே அறிவு தொழிற்பட வேண்டும். அறிவு தொழிற்படத் தொடங்கினால், உணர்வு குறையத் தொடங்கிவிடும். - இக்கருத்துக்களை மனத்தில் கொண்டு ஒரு அடியையோ, சில அடிகளையோ அவ்வப்பொழுது படிக்கச் சொல்லிக் கேட்கும்போது என்ன சிந்தனைகள் மனத்தில் தோன்றினவோ அவையே இங்கு இடம் பெற்றுள்ளன. இச்சிந்தனைகள் என்னுடைய அறிவின் துணைகொண்டோ, அறுபது வருட இலக்கியப் பயிற்சியின் விளைவாகவோ தோன்றியவை அல்ல. யாழ்ப்பாணம் திரு. ச. மார்க்கண்டு அவர்கள் இரண்டு அடிகளையோ, நான்கு அடிகளையோ படித்துக் காட்டிய உடன் அந்த விநாடி என் மனத்தில் தோன்றிய சிந்தனைகளே இங்கு இடம்பெற்றுள்ளன. அதனாற்றான், திருவாசகம் - சில சிந்தனைகள் என்று இந் நூலுக்குப் பெயரிடப்பெற்றுள்ளது. . மணிவாசகரின் அருள் துணைகொண்டு திருவாசகம்சில சிந்தனைகள் பகுதி-1 பகுதி-2. பகுதி-3, பகுதி-4 என்பன முன்னரே வெளிவந்துள்ளன. இப்பொழுது நிறைவுப் பகுதி வெளி வருகிறது. - - குலாப் பத்து முதல் அச்சோப் பதிகம் வரையான திருவாசகப் பாடல்கள் இந்த நிறைவுப் பகுதியில் இடம் பெறுகின்றன. வழக்கம்போல பின்னுரை நூலுடன் இணைந்துள்ளது. நூல் முழுவதற்கும் ஆன முடிவுரை இறுதிப்பகுதியாகச் சேர்க்கப்பெற்றுள்ளது. -