பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னிப் பத்து-5 'எழில் கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன் என்று என்று (ஏத்திக்கொண்டு) தொழுத கையினராகி, தூமலர்க் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு தவறாமல் கிடைக்கக்கூடிய (வழுவில்ா) மலர்ச் சேவடி, இப்பொழுது என் சென்னியின்கண் மலர்ந்துள்ளது என்றபடி, இக்கருத்தை நாவரசர் பெருமான் திருவையாற்றுப் பதிகத்தில் முன்னின்ற தொண்டரைக் கோதில் செந்தேன் தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வமார்க்கும் ஐயாறன் அடித்தலமே (திருமுறை:492-7) என்றும், சுழலார் துயர் வெயில் சுடும்போது அடித்தொண்டர் துன்னும் நிழலாவன் (திருமுறை:492-19) என்றும் பாடியருளுதலைக் காணலாம். 587. வம்பனாய்த் திரிவேனை வா என்று வல் வினைப் பகை மாய்த்திடும் உம்பரான் உலகு ஊடு அறுத்து அப் புறத்தன் ஆய் நின்ற எம்பிரான் அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் செம் பொன் மா மலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே 9 அமைச்சுத் தொழில் பூண்டு உலகியல் முறையில் பல்வேறு செயல்களைச் செய்துகொண்டிருந்தாலும் அவருடைய வாழ்வு முன்னேற்றத்திற்கு அச்செயல்கள் எவ்வித உதவியும் செய்யவில்லை ஆதலால் 'வம்பனாய்த் திரிவேனை' என்றார். இவரோ இந்த உலகியற் சூழலிற் சிக்குண்டு பல்வேறு பணிகளைச் செய்துகொண்டிருந்தார். இவரை ஆட்கொண்டவனோ மன வாசகம் கடந்த நிலையில் உள்ளவனாவான். அப்படியிருக்கின்ற ஒருவனுக்கு இந்த வம்பனை அழைத்து ஆட்கொள்ள வேண்டிய