பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ல் திருவாசகம் சில சிந்தனைகள்-5 தேவை என்ன? இந்த வம்பர் அவர் இருக்குமிடம் சென்று தம்மை ஆட்கொள்ள வேண்டுமென்று வேண்டினாரா? இல்லையே! அப்படியிருக்க உம்பரான் ஆகிய அவன் இவரை ‘வா' என்று அழைத்து, இவருடைய வல்வினையை ஒரே விநாடியிற் போக்கினான். உம்பரான் என்று சொன்னவுடன் ஏதோ தேவலோகத்தில் உள்ளவன் என்று நினைத்துக்கொண்டு அண்ணாந்து பார்க்கவேண்டா. இங்கு அவர் கூறிய உம்பர் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் கடந்து அப்பால் இருக்கும் இடத்தில் உள்ள ஒருவனைக் குறிப்பது ஆகும். அந்த இடத்தில் உள்ளவன், வம்பனாய்த் திரிந்த ஒருவரை ஆட்கொண்டது அவன் காட்டிய கருணையின் வெளிப்பாடாகும். வம்பனாய்த் திரிந்த ஒருவருக்கு அருள்செய்தது எது தெரியுமா? அவனுடைய கருணை பொங்கும் விழிகளோ, அபயம் தரும் கைகளோ அல்ல. பின்னர் எது? 'அன்பர் ஆனவர்க்கு அருளி (அருள்செய்து மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும் செம்பொன் மாமலர்ச் சேவடி’ ஆகும் அது. 588. முத்தனை முதல் சோதியை முக் கண் அப்பனை முதல் வித்தினைச் சித்தனைச் சிவலோகனைத் திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர்காள் இங்கே வம்மின் நீர் உங்கள் பாசம் தீரப் பணிமினோ சித்தம் ஆர்தரும் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே. 10 குருநாதரின் திருவடிகளைத் தொழுது பிறப்பை அறுத்து வீடுபேற்றைப் பெறும் பயனைப் பெற்றவர் ஆதலின் உயிர்கள்மாட்டுக் கொண்ட எல்லையற்ற கருணையால் தாம்