பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னிப்பத்து-53 பெற்ற சிறப்பையும் அதற்குரிய காரணத்தையும் அதனைப் பெறும் வழியையும் இப்பாடலில் அருளிச்செய்கின்றார் அடிகளார். } இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு திரிகின்ற அடியார்களைப் பார்த்து, தம் கருணைப் பெருக்கால் இங்கே வாருங்கள்’ என்று அழைக்கின்றார் அடிகளார். அழைத்து, 'உங்கள் பாசம் தீரவேண்டுமேயானால், அதாவது உங்கள் பிறப்பு அறவேண்டுமேயானால் நான் கண்ட வழியை இதோ உங்களுக்குச் சொல்கிறேன்’ என்கிறார். அது என்னவழி தெரியுமா? - 'உங்கள் புறமனம், அகமணம் என்பவற்றைத் தாண்டி, மேற்சித்தத்தையும் கடந்து, அடிச்சித்தம்வரை சென்று அங்கு நிறைந்திருக்கும் அவன் திருவடிகளைப் பணிவீர்களாக' என்கிறார். .