பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. திரு வார்த்தை (அறிவித்து அன்புறுதல்) இப்பதிகத்திற்குத் திருவார்த்தை என்ற தலைப்பை முன்னோர் தந்துள்ளனர். எந்த அடிப்படையில் திருவார்த்தை என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை அறியக்கூடவில்லை. ஆயினும், பெரிய புராணத்தில் வரும் ஒரு தொடர் இதற்கு உதவிற்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது. . காரைக்கால் அம்மையார் புராணத்தின் ஐந்தாம் பாடலில் அண்டர் பிரான் திருவார்த்தை அணைய வருவன பயின்று’ என வரும் பகுதியிலுள்ள திருவார்த்தை என்ற சொல்லில் ஈடுபட்டவர்கள் அதனை இங்குப் பயன்படுத்தினர் என்று நினைக்கத் தோன்றுகிறது. அம்மையாருடைய வரலாற்றிலும், அவர் பாடல்களிலும் அதிகம் ஈடுபட்டுள்ளவர் இத்தலைப்பைத் தந்தவர்கள் என்பதைக் கோயில் மூத்த திருப்பதிகத்தின் முன்னுரையிலும் குறித்துள்ளோம். அதே அடிப்படையில்தான் திருவார்த்தை' என்ற தலைப்பும் தரப்பெற்றுள்ளது போலும். இறைவன் புகழ் பாடுதலின் திருவார்த்தை எனப் பெயரிட்டனர் என்றும் சில உரையாசிரியர்கள் குறிப்பிடுவர். இறைவன் திருவிளையாடல்களைப்பற்றிக் கூறுதலின் திருவார்த்தை (வார்த்திகம்) எனப் பெயரிட்டனர் என்றும் சிலர் கூறுவர். அப்படியானால் திருவார்த்தை என்பதற்கு என்ன பொருள் காண்பது? இப்பதிகத்திலுள்ள பாடல்கள் அனைத்தும் முற்பகுதியில் இறைவன் புகழைப்