பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு வார்த்தை_55 பாடுகின்றன. பாடல்களின் பிற்பகுதிகள் இறைவனின் பரங்கருணையை நன்கு அறிந்து அதனை அனுபவித்த அடியார்களை இறைவனென்றே அடிகளார் நினைப்பதாக அமைந்துள்ளன. வைகுந்த நாதனை நேரடியாகப் பாடி அருள் பெற்ற ஆழ்வார்கள் பதினொருவர் ஆவர். இத்தொகுப்பிற் சேராமல் அதாவது நேரடியாக வைகுண்ட நாதனைப் பாடாமல், அவன் அருளைப் பூரணமாகப் பெற்ற நம்மாழ்வாரையே இறையென நினைத்து, அவரைப் பாடியவர் மதுரகவி என்ற பெருமகனார். இதன் காரணமாகவே இறைவனை நேரே பாடிய ஆழ்வார்களுள் இவரும் ஒரு ஆழ்வாராக இடம்பெற்றார். அப்பூதியடிகள், பெருமிழலைக் குறும்பனார் என்ற இருவரும் முறையே ஆளுடைய அரசரையும், ஆளுடைய நம்பியையுமே இறையெனப் போற்றி வழிபட்டு உய்கதி அடைந்ததால் நாயன்மார் வரிசையில் இடம்பெற்றனர் என்பதும் மேலே கூறிய கருத்துக்கு அரண்செய்வதாகும். இறையருட் போக்கை அறிந்துகொண்டவர்களை “எம்பிரான் ஆவாரே என்று அடிகளார் பாடியது இந்நாட்டு மரபை ஒட்டியே பாடப்பெற்றதாகும். இறையருள் யார்யாருக்கு எவ்வகையில் அருள்புரிகிறது என்பதைப் புறத்தே நிற்பவர்கள் அறியமுடியாது. பல நேரங்களில் அந்த இறையருளைப் பெறுபவர்கள்கூடத் தமக்குக் கிடைத்தது அந்த அருள்தான் என்று புரிந்து கொள்வதில்லை. இதுவே பெரும்பாலான உலகியற்கை இதன் மறுதலையாக இறையருள் எவ்வாறெல்லாம் வந்து உதவுகிறது என்பதை அறியக்கூடியவர் சிலரேயாவர். தமக்கு மட்டுமல்லாமல் பிறருக்குச் செய்யப்பட்ட அருளைக்கூட, தம் இறையனுபவம் காரணமாக அறிந்து