பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. திருவாசகம் சில சிந்தனைகள்-5 கொள்ளக் கூடியவர் மிகமிகச் சிலரேயாவர். இத்தகைய பெருமக்களை அருளாளர்கள் என்றும், இறைவனே என்றும்கூடக் கூறிவிடலாம். இறைவனை வழிபடுவதோடு அல்லாமல், அல்லது இறைவனை வழிபடாமற்கூட அருளாளர்களை இறைவன் என்றே நினைத்து வழிபடுவது இந்நாட்டு மரபாகும். திருவார்த்தையின் பாடல்களின் இறுதியாக அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே என்றும், திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே என்றும் வரும் தொடர்கள் மேலே கூறிய கருத்திற்கு அரண்செய்கின்றன. இந்தப் பாடல்களில், அன்று புழக்கத்தில் இருந்த பல கதைகளை அடிகளார் எடுத்துப் பேசியுள்ளார். 'அறிவித்து அன்புறுதல்’ என்பது வழக்கம்போலக் குழப்பத்தை உண்டாக்கும் உட்தலைப்பாகவே அமைந்துள்ளது. 589. மாதிவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி கோது இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆய நல்கும் போது அலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே i முதலடியின் இறுதியிலுள்ள மா மலர் மேய சோதி” என்பது திருக்குறளை அடியொற்றி எழுந்த பகுதியாகும். 'மலர் மிசை ஏகினான்’ (திருக்குறள்:3) என்ற தொடரில் மலர் என்பது இதய கமலம் என்ற பொருளைத் தந்துநிற்கிறது. அக்கருத்தையே சற்று விரிவுபடுத்தி ஏகினவனைச் சோதியாக உருவகித்து மா மலர் மேய சோதி என்று பாடுகிறார் அடிகளார்.