பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு வார்த்தை- 67 இதய கமலம் என்று இவர்கள் பேசுவது இரத்த ஒட்டத்திற்கு உதவிசெய்யும் இருதயத்தைக் குறிப்பதன்று. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆழ்! ஆதாரங்களில் நான்காவதாகவுள்ள அநாகதம் என்ற பகுதியையே இது குறிப்பதாகும். இந்த ஆறு ஆதாரங்களும் தாமரை மலர்போன்றவை என்று சொல்லப்படுகிறதேதவிரப் பரு உடற்கூறு அமைப்பில் இவற்றிற்குத் தனிவடிவம் உண்டா என்பது தெரியவில்லை. எனவே, அடிகளார் மாமலர் மேய சோதி’ என்று கூறுவது இதய கமலத்தில் தோன்றும் சோதி வடிவினையே ஆகும். நான்காவது அடியிலுள்ள ஆதிப் பிரமம் என்ற தொடர்பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. பிரமம் என்ற சொல் தேவாரம் முதலியவற்றில் இடம்பெறவில்லை. இருக்கு வேதத்திலும், பிரமத்திற்குத் தனிச்சிறப்புப் பேசப்பெறவில்லை. முக்கியமான பதினொரு உபநிடதங்களில் கடோபநிடதம் 'பிரமம்' என்ற சொல்லைப் பயன் படுத்துகிறது என்றாலும், மூலப்பொருள் என்ற பொருளில் அதனைப் பயன்படுத்துகிறதா என்பது ஆராய்ச்சிக்குரியது. 'ஏகம் சத்' என்ற வேத வாக்கியம் பிரமத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாமேனும், வேத காலத்தில் பிரமத்திற்கு இவ்வளவு சிறப்பு இல்லை. உபநிடதங்களில் மட்டுமே ப்டிப்படியாகச் சிறப்புப் பெற்ற பிரமம், பதினோராவது உபநிடதமான சுவேதாஸ்வதர உபநிடதத்தில் பெரும் சிறப்பைப் பெறுகிறது. முதன்முதலாகச் சிவபெருமானை மூலப்பொருள் என்று கூறி, அதுவே பிரமம் என்று கூறிய பெருமை பதினோராவது உபநிடதமான சுவேதாஸ்வதர உபநிடதத்திற்கே உரியது. வேதத்திலும் ஏனைய உபநிடதங்களிலும் சிவபெருமானுக்கு இத்தகைய சிறப்பு தரப்பெறவில்லை.