பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68_திருவாசகம் சில சிந்தனைகள்-5 இவை அனைத்திற்கும் எதிராகச் சுவேதாஸ்வதர உபநிடதம் சிவபெருமானையே பிரமம் என்று குறிக்கின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாவரசர் பெருமானும் அடிகளாரைப்போல இந்த உபநிடதத்தில் அதிகம் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. நாவரசர் பெருமானின் “விறகில் தீயினன்' (திருமுறை:5.90.10) என்று தொடங்கும் பாடல் சுவேதாஸ்வதர உபநிடதத்தின் ஒரு பாடலின் முழு மொழிபெயர்ப்பாகும். நாவரசரை அடுத்து, இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வந்த அடிகளாரும் இந்த உபநிடதக் கருத்தை ஆதிப்பிரமம்' என்ற சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் அப்படியே எடுத்து ஆள்கிறார். இந்தப் பிரமத்தின் இயல்பை உணர்ந்தவர்கள் தம்மால் வழிபடப்படும் இறைவனாகவே கருதப்படுவர் என்ற புதுமையான கருத்தை 'அருள் அறிவார் எம் பிரானாவாரே என்ற தொடரில் குறிப்பிடுகின்றார். பிரான் என்ற சொல் அனைத்திற்கும் தலைவனாகவுள்ள இறைவனையே குறிக்கும். அடியார்களை இறைவனாகவே கருதி வழிபடும் மரபு மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழ் நாட்டில் பரவியிருந்தமையைப் பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்களின் வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதுவரை அடியார்கள் என்று அடிகளார் கூறியது திருப்பெருந்துறையில் குருநாதர் எதிரேயிருந்த அடியார்களையே ஆகும். தெருளார் கூட்டம் காட்டாயேல்’ (385) என்றும், 'உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் (378) என்றும் வரும் பகுதிகள் திருப்பெருந்துறையில் கண்ட அடியார் கூட்டத்தையே குறிக்கும். ஆனால், திருவார்த்தையில் கூறப்பெறும் அடியார்கள் இவர்களின் வேறானவர்கள். இவர்கள் உலகிடை யூத உடலோடு வாழ்கின்றவர் ஆவார்கள். இந்த உடலுடன்