பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு வார்த்தை_59 இங்கே வாழ்ந்தாலும் இவர்கள் ஏனையோரிலும் வேறுபட்டவர் என்பதைக் குறிக்கவே அருள் அறிவார்’ (589) என்றும், திறமறிவார் (590) என்றும், ஆண்டு கொண்ட இயல்பு அறிவார் (592) என்றும், அருளும் பரிசு அறிவார் (593 என்றும் இதுபோன்ற பல தொடர்களால் கூறிச்செல்கிறார். மேலே கூறப்பெற்ற தனிச்சிறப்புக் காரணமாகவே, இந்த அடியார்களை மனித உடலோடு வாழும் எம்பிரான் ஆவார் என்று அடிகளார் சிறப்பித்துப் பேசுகிறார். திருப்பெருந்துறைக் கூட்டத்தைத் தவிர வேறு யாரையும் இவ்வளவு சிறப்புத் தந்து அடிகளார் பேசியது இல்லை. இந்தப் புதுவழி, அடிகளார் மனத்தில் தோன்றிய, வெளிப்பட்டுத் தெரியாத, ஒரு புரட்சியை அறிவிப்பதாகும். 590. மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும் கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்குச் சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே 2 இப்பாடலில் அந்த மூலப் பரம்பொருள் இம்மண்ணிடை இறங்கி வந்து உயிர்கள் உய்ய நல்நெறி காட்டிற்று என்று கூறுவதன் மூலம், குருநாதராக வந்தவர் யாரென்பதைப் பேசுகின்றார். இடவை மட நல்லாட்குக் கருணை அளிக்கும் என்ற பகுதியில், பிட்டு விற்ற வாணிச்சியின் கதை பேசப் பெற்றுள்ளது எனப் பலரும் கூறியுள்ளனர். இது மேலும் சிந்திப்பதற்கு உரியது. மடநல்லாள் என்று அடிகளார்