பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருவாசகம் சில சிந்தனைகள்-5 கூறியிருத்தலின் அடிகளார் கூறும் பல்வேறு கதைகளில் பிட்டு வாணிச்சி அல்லாத மற்றோர் இளம்பெண்ணை இச்சொல் குறிக்குமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. பிட்டு விற்றவள் வயது முதிர்ந்த மூதாட்டி என்றே புராணங்கள் பாடிச்செல்கின்றன. மட நல்லாள் என்ற பெயர் இதனோடு பொருந்துமாறில்லை. 591. அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணி வகை செய்து படவு அது ஏறிப் பர்ரொடு விண்ணும் பரவி ஏத்தப் பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன் பெண் பால் உகந்து மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே 3 'அமரர் கோமானாகிய ஆனந்தக்கூத்தன் அறு சமயத்தோரும் தன்னை வழிபட வழிவகுத்து மேலுலகோர், மண்ணுலகோர், ஆகியோர் அனைவரும் தன்னைப் பரவி ஏத்தப் பெண்பால் உகந்து, பரவி ஏத்துபவர்களின் பிறவியாகிய பிணி கெட அருள்வான். அவன் யாரென்று தெரியுமா? அமரர் தொழுது ஏத்துபவனாகிய அவன், சாதாரண வலைஞனைப்போல் படகில் ஏறி வலைவீசி மீன்பிடித்தான் என்க. வலைவீசி மீன்பிடித்தான் என்பது வலைவீசிய திருவிளையாடல் கதையைக் குறிப்பதாகும். அறுவகைச் சமயம் என்பதற்கு அகச்சமயம் ஆறும் என்று பொருள் கூறுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. 592. வேடு உரு ஆகி மயேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னைத் தேட இருந்த சிவபெருமான் சிந்தனை செய்து அடியோங்கள் உய்ய