பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு வார்த்தை_0-71 ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அந்நாள் ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே 4 ‘மயேந்திர மலையில் வேடுருக் கொண்டு இறைவன் இருந்தானாக, தேவர்கள் அவனை இன்னானென்று அறியாமல் தேடினார்கள். அத்தகைய பெருமான் குதிரைச் சேவகனாகக் குதிரைமேல் ஏறி அடியார்களாகிய நாங்கள் உய்யும்பொருட்டு இங்கு வந்து எங்களை ஆண்டுகொண்டான். இந்த நுணுக்கத்தை அறிந்தவர்களை எம்பிரான் என்றே கருதுகிறோம். 'மனிதர்களினும் தாங்கள் மேம்பட்டவர்கள் என்று கருதித் தருக்கித் திரியும் தேவர்கள், மயேந்திர மலையில் வேடுருக் கொண்டு அமர்ந்திருந்தவனை, அவன் இன்னானென்று அறிந்தார்களில்லை. ஆனால் குதிரைச் சேவகனாக வந்தவனைக் கண்டவுடனேயே இன்னானென்று அறிந்து கொள்ளும் ஆற்றலுடையவர்களை எம்பிரான் என்றே நான் கருதுகின்றேன்’ என்றவாறு. ‘தேவர்கள் தேடிச்சென்றும் காண்பரியானாகிய அவன், தொழும்பர்களை (ஏடர்களை) ஆட்கொள்ள வேண்டி விரைந்து செல்லும் பரிமா ஏறி வந்தான்' என்க. 593. வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மாக் கருணைக் கடல் ஆய் அடியார் பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள் உந்து திரைக் கடலைக் கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை அதனில் பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே 5