பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருவாசகம் சில சிந்தனைகள் 5 இமையோர்கள் வணங்கி ஏத்த இருந்த பெருமான், திருப்பெருந்துறையில் மானுட உருக்கொண்டு வந்து அடியார்களாகிய எம்முடைய ஆணவம் முதலிய குற்றங்கள் விண்டு அற்றுப்போகும்படியாகச் செய்தான். இதுமட்டுமா? அன்றொருநாள் இலங்கையர்கோன் மனைவி மண்டோதரி எல்லையற்ற பக்தியுடன் இப்பெருமானை வழிபட, அங்கே சென்று அவளுக்கு மகனாய்த் தோன்றி அருள் செய்தான் என்க. இது உத்தரகோசமங்கைப் புராணக் கதையைத் தழுவியது. 594. வேவத் திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய்க் கடி நாய்கள் சூழ ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான் இயங்கு காட்டில் ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று கேவலம் கேழல் ஆய்ப் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே 6 இப்பாடலின் முதல் மூன்று அடிகள் தவம் செய்யும் அர்ச்சுனனுக்கு அருள்செய்ய ஒரு பன்றியை விரட்டிச் சென்று அதன்மேல் அம்புவிட்ட கதையைப் பேசுகின்றன. காட்டில் நடந்த இக்கதைக்கு ஏற்ப, பன்றிக்குட்டிக்குப் பால்கொடுத்த கதையும் அமைந்திருத்தலின் இரண்டையும் ஒன்றாக்கிப் பாடினார். இரண்டும் காட்டில் நடந்தவை; ஒரு பன்றியைக் கொன்றும், மற்றோரிடத்தில் தாய்ப்பன்றியை நினைத்து வருந்தும் பன்றிக்குட்டிகளுக்குத் தாய்ப் பன்றியாய்ச் சென்றும் திருவிளையாடல் செய்த சம்பவங்கள் பேசப்படுகின்றன. இரண்டு கதைகளிலும் பன்றிகள் இடம்பெறுகின்றன. மிகத் தாழ்ந்ததும் மிகக் கேவலமாகக்