பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு வார்த்தை_73 கருதப்படுவதுமாகிய விலங்கு பன்றி என்று கூறுவர். அந்தப் பன்றிக் குட்டிகளுக்கு, தானும் பன்றியாக மாறிப் பால் கொடுத்தான் என்ற கதை, அவனுடைய எளிவந்த தன்மைக்கு ஈடிணையற்ற எடுத்துக்காட்டாகும். 'பெருந்துறை ஆதி என்றமையின் அனைத்திற்கும் மூலமாய் உள்ள அவன் பெருமை கூறியவாறாயிற்று. அவ்வளவு பெருமைவாய்ந்த அந்த ஆதி, என்ன செய்தது? திரிபுரங்களை அழித்தது. அது அந்த ஆதியின் எல்லையற்ற பேராண்மைக்கு எடுத்துக்காட்டாகும். திரிபுரத்தை அம்பு எய்யாமல் சிரித்தே எரித்த அந்த ஆதி, கேவலம் ஒரு பன்றியின்மேல் அம்பை எய்தது. இது அந்த ஆதிக்கு ஓர் விளையாட்டு. அப்படியிருந்தும் அதே ஆதி, தாயை இழந்து வருந்தும் பன்றிக் குட்டிகட்குப் பாலுட்டியது என்றால், அதனுடைய பெருமையை அறிபவர்களை இறை என்றே கூறுகிறார் அடிகளார். ஆணவம் கொண்ட திரிபுரத்தை அழித்தது மறக்கருணையின்பாற்படும். தன் கை அம்பினால் பன்றியை எய்தது அப்பன்றிக்கு வீடுபேறு அளிக்க மேற்கொண்ட உபாயமாகும். அம்பு எய்தலைமட்டும் எடுத்துக் கொண்டால் அது மறச்செயல். அதன் முடிவில் பன்றிக்கு வீடுபேறளித்தது கருணையாகும். ஆகவே, இதனை மறக்கருணை எனலாம். ஆனால், பன்றிக்குட்டிகள் எக்குற்றமும் உடையவை அல்லவாதலால் அவற்றின் துயரைப் போக்கத் தானே தாய்ப்பன்றி ஆயினான். சர்வ வல்லமை உள்ள அவன் இருந்த இடத்தில் இருந்தே கருணை பாலித்துப் பன்றிக்குட்டிகளின் பசியைப் போக்கியிருக்கலாம். இவ்வாறு செய்திருப்பின் பன்றிக் குட்டிகளின் பசி அடங்கியிருக்கும். ஆனால், தாய் முலையைப் பற்றிச் சுவைக்கும் அந்த இன்ப அனுபவம் கிட்டாமல் போயிருக்குமே! அதனால்தான் அந்தக்