பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74- திருவாசகம் சில சிந்தனைகள்-5 கருணை வள்ளல் தானே தாய்ப்பன்றி ஆயினான் என்ற இந்த நுணுக்கத்தை அறிகின்ற அடியார்களை எம்பிரான் என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை. 595 நாதம் உடையது ஓர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார் ஒதிப் பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும் போது அலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப் பேதம் கெடுத்து அருள் செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே 7 'திருமகளும், கலைமகளும் வேண்ட அவ்விருவர்க்கும் இரங்கி அருள் செய்த பெருமான் என்ன செய்தான்? மண்ணிடை வந்து குருநாதராகத் தோன்றினான். ஏன்? உயிர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள பேத உணர்வை போக்குவதற்காகவே அவன் குருநாதராக வந்தான்’ என்க. பொருள்களிடையே வேறுபாடு இல்லை என்பதை அறிவு வாதத்தால், தருக்க ரீதியாக எவ்வளவு எடுத்துக் கூறினாலும் மனிதன் பேத உணர்வை விட்டுநீங்குதல் என்பது ஏறத்தாழ இயலாத காரியம். இறையருள் பெற்ற அருளாளர்கள் மட்டுமே இந்தப் பேத உணர்வைப் போக்க முடியும். பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி’ என்று தாயுமானவப் பெருந்தகை பாடும்போது, பேத உணர்வு நீங்கிய நிலையைப் பார்க்கின்றோம். இது இறை அருளால் கிட்டுவதேயன்றி, மனித முயற்சியால் கிட்டுவதன்று. இந்த நுணுக்கத்தைதான் குருநாதராக வந்தவர் பேதம் கெடுத்தார்' என்கிறார் அடிகளார். பேதம் கெடுத்தவனை இன்னான் என்று அறிபவர்கள் எம்பிரானாகக் கருதத் தக்கவர்கள்.