பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு-வார்த்தை_75 596. பூ அலர் கொன்றை அம்மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் மாது நல்லாள் உமை மங்கை பங்கன் வண் பொழில் சூழ் தென் பெருந்துறைக் கோன் ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும் ஒவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே 8 கூர்மையான நகங்களையுடைய புலியைக் கொன்ற வீரன் என்பது தாருகாவனத்துக் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். தீயில் தோன்றும் ஒவிய மங்கையர் தோள் புணரும் என்ற தொடர் குறிப்பிடும் கதை விளங்குமாறில்லை. 597. து வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திர நாதன் வந்து தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று காதல் பெருகக் கருணை காட்டித் தன் கழல் காட்டிக் கசிந்து உருக கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே. 9 கிடப்பு-நிலை 2 தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் என்ற தொடரால் தேவர்கள்கூடத், துரத்தே நின்று வணங்கும் திருவடிகளைத் தம் தலைமேல் வைத்து அருள்புரிந்தான் என்கிறார். அதன் பயனாகப் பிறவியால் வரும் துன்பத்தைக் கெடுத்து (கேதம் கெடுத்து) ஆண்டான். 'இதனால் விளைந்த மாபெரும் பயனொன்று உண்டு. அது யாதெனின், யான் உள்ளம் உருகுமாறு செய்ததே ஆகும். இந்த உருக்கம் என்பால் தோன்றத் திருவடி