பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76- திருவாசகம் சில சிந்தனைகள் 5 வைத்தல் மட்டுமா செய்தான்? எல்லையற்ற கருணையையும் காட்டினான். எல்லா உயிர்களையும் உய்விக்கும் தன் திருவடிகளையும் காட்டினான். - இவற்றின் பயனாகவே என் கேதங்கள் அகன்றன; உள்ளம் உருகிற்று. இதனை அறிந்தவர்கள் எம்பிரானுக்குச் சமமாவார்கள்’ என்றபடி, 598. அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக பரம் ஆயது ஒர் இன்பம் எய்தச் சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே 10 குதிரை விற்கும் வணிகர்கள் கூட்டத்தோடு (சாத்தோடு) வந்தவன் மாபெரும் திறமையுள்ளவன் (சதுரன்). ஆதலால் வழியோடு செல்கையிலேயே மதுரை மங்கையர் சங்கு வளையல்களைக் கவர்ந்தான். வளையல்களைக் கவர்ந்தான் என்றால், தன் அழகு காரணமாக மங்கையர் மையல் கொள்ளும்படி செய்தான் என்றே பொருள் கூறிவருகின்றனர். இந்நாட்டு மரபின்படி இறைவன் ஒருவனே புருஷன் என்றும், எல்லா உயிர்களும் பெண்கள் என்றும் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் பெண்களைக் காதல் கொள்ளச் செய்தான் என்று பொருள் கூறி வருகின்றனர். ஆனால், இங்கே இவ்வாறு பொருள் செய்வது மனத்திற்குத் திருப்தியளிப்பதாக இல்லை. இதற்கு வேறுவகையாகப் பொருள்கொள்ளலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. குதிரைச்சேவகன் உண்மையில் ஆலவாய்ச்