பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு வார்த்தை_77 சொக்கன்தானே! எந்த வடிவத்தை அவன் எடுத்துக் கொண்டாலும் ஒளிவடிவான அப்பெருமானின் தேஜஸ் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமொன்றும் இல்லை. அவனைக் காணும்போது ஏற்படும் ஈடுபாடு, கேவலம் உடல்பற்றியது அன்று. அது உயிர்பற்றிய தாகும். அவனைக் கண்டவர்கள் உள்ளம் ஒருமுகப்படுகின்றது; மனம் சலிப்பின்றி நிற்கிறது; ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்கின்றது. அதன் பயனாகக் குருதியோட்டம் குறைந்து ஒருவகைத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதனால் கைவளையல்கள் கழலுகின்றன. மனிதர்களிடையே தோன்றும் காமம் அல்லது காதல்பற்றியதன்று இது. உயிர்க்குத் தலைவன் உலா வரும் பொழுது, கண்டோர் அனைவருடைய உடல்களும் குழைகின்றன. ஆண்களுக்கும் இது உண்டு. அவர்கள் இளைப்பைக் காட்ட வளையல் முதலிய அணிகள் அவர்பால் இல்லை. அதனால் அவர்கள் இளைப்பு புறத்தே தெரிவதில்லை. மங்கையர்களைப் பொறுத்தமட்டில் வளையல்கள் இருத்தலின் உடல் இளைப்பை அவை காட்டிவிடுகின்றன. மதுரை மங்கையர் சங்கம் கவர்ந்து' என்பதில் உள்ள ‘கவர்ந்து என்பது, கழன்றது என்ற பொருளையே சுட்டிநிற்கின்றது. ওঁ ওঁ ওঁb