பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணப் பதிகம்- 79 இப்பாடல் வேண்டும் வேண்டும்’ என்ற முறையில் அமைந்துள்ளது. என்ன வேண்டும் என்று கேட்கிறார்? முதலடியில் பிறப்பு அற வேண்டும்’ என்று கூறிவிட்டு அடுத்தபடியாகப் பத்திமையும் வேண்டும்’ என்று சொல்வது சிந்திக்கற்பாலது. அடுத்து இரண்டு அடிகளில் அடியார் நடுவுள் இருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்கிறார். பிறப்பு அறவேண்டும் என்று முதலிற் கூறியமையால் அடுத்த பிறப்பில் பத்திமையும் அடியார் நடுவுள் இருக்கும் சிறப்பும் வேண்டும் என்கிறாரா? இவ்வாறு பொருள் கூறியுள்ளனர் பலர். ஆனால், அது பொருந்துவதாகத் தெரியவில்லை. * இந்தப் பிறப்பிலேயே நாள் முழுவதும் பக்தி செய்யும் ஒரு சிறப்பு வேண்டும். அவ்வாறு பக்தி செய்தால் அடியார் கூட்டத்தின் இடையேயிருக்கும் அருளை அவன் புரிவான். இப்பிறப்பில் எஞ்சிய நாட்களின் முழுநேரப் பக்தி செய்வதிலும் அடியார் நடுவுள் இருப்பதிலும் கழியவேண்டும். இன்றேல் ஐம்பூதங்களோடு தொடர்புடைய இந்தப் பிறப்பு அழிந்து ஒழிய வேண்டும் என்று அடிகளார். பேசுவதாகக் கொள்வதே நேரிது என்று கொள்ளத் தோன்றுகிறது. ஒர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்றதால் ஒப்பற்ற திருவருளையே வடிவாகக் கொண்ட உன்னைக் காட்டி என்பதாம். 600. உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னைப் பிரிந்து இங்கு ஒரு பொழுதும் தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால் பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய் கழல் அடி காட்டிப் பிரியேன் என்று என்று அருளிய அருளும் - பொய்யோ எங்கள் பெருமானே 2