பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ல் திருவாசகம் சில சிந்தனைகள்-5 مميمه" இப்பாடலின் நான்காவது அடி மிகப் பெரிய குழப்பத்தை உண்டாக்கும் பகுதியாகும். 'பெய் கழல் அடி காட்டிப் பிரியேன் என்று என்று அருளிய அருளும் பொய்யோ?” என்று வரும் பகுதியே குழப்பத்தை விளைவிக்கின்ற பகுதியாகும். . குருநாதராக வந்த பெருமான் 'கோலமார்தரு பொதுவினில் வருக (2.128) என்று ஆணையிட்டது தவிர வேறு எதனையும் கூறியதாகத் திருவாசகத்தில் பேசப்பெறவில்லை. இந்த ஆணையை இட்டுவிட்டு உடனே மறைந்தார் என்பதைப் பொதுவினில் வருக என ஏல என்னை ஈங்கொழித்தருளி (2128-129) என்று அடிகளாரே பாடியுள்ளார். அப்படியிருக்க, பிரியேன்” என்றென்று அருளியது எப்பொழுது, எங்கே நடைபெற்றது? நல்ல வேளையாக அருளிய அருளும் என்று கூறினாரே தவிரச் சொல்லிய சொல்லும் என்று கூறவில்லை. ஒரே விநாடியில் திருவடி தீட்சை செய்து அடியார் நடுவுள் இருக்கும் வாய்ப்பையும் தந்ததால் குருநாதர் தம்மைப் பிரியமாட்டார் என்ற எண்ணம் மனத்திடைத்தோன்றி வலுப் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய எண்ணம் அவர் மனத்திடைத் தோன்றக் காரணம் குருநாதரின் அருளே தவிர வேறொன்றாக இருக்க முடியாது. குறிப்பிட்ட இந்த நாளில் குதிரைகள் வரும் என்று பாண்டியனிடம் அடிகளார் சொல்ல எது காரணமாக இருந்தது? குருநாதரோ பெருந்துறையானோ இவ்வாறு சொல்லியதாக எந்தத் திருவிளையாடலும் சொல்லவில்லை. நம்பி திருவிளையாடலில் அரசனுடைய பணியாளர் வந்து அடிகளாரை அழைத்தபொழுது அவர் கூறியதாகவுள்ள பாடல் பின்வருமாறு: .