பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணப் பதிகம்- 83 தென்னவன் அமைச்சனே யான் என்ன காரியம் செய்தேன் மேல் என்னதாய் விளையும் கெட்டேன் இவுளி கொள்வதற்கே வந்தேன் பொன்னையே அழித்தேன் அந்தோ புகல ஒர் மாற்றம் உண்டோ மன்னவர் பிழைத்தல் ஆகா மற்று இனி ஆவது என்கொல் (நம்பி ஞானபதேசம்: 63) இதுவே நடைமுறைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தக் குழப்பநிலையிலிருந்த அடிகளாருக்கு ஆவணி மூலத்தில் குதிரை வரும் என்று உள்ளுணர்வு சொல்ல, அதனையே பாண்டியனிடம் சென்று கூறுகிறார். இந்த உள்ளுணர்வு இறைவனுடைய அருட்செயல் என்று அடிகளார் வலுவாக நம்பினார். ஆனால், تي 9ےl நடைபெறவில்லை. இதேபோலக் குருநாதர் பிரியமாட்டார் என்று உள்ளுணர்வு சொல்ல, அதைக் குருநாதர் சொல்லியதாகவே அடிகளார் கருதினார். இந்த அடிப்படையைத்தான் பிரியேன் என்று என்று அருளிய அருளும் பொய்யோ என்று பாடல் சொல்லிச் செல்கிறது. 601. என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழு முதலே இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே 3