பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84-ல் திருவாசகம் சில சிந்தனைகள்-5 'என்பே உருக என்பது தொடங்கி முழுமுதலே' என்பது வரையுள்ள பகுதி திருப்பெருந்துறை நிகழ்ச்சி பற்றியதாகும். “இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே’ என்ற பகுதியில் உண்கின்ற என்ற நிகழ்காலப் பெயரெச்சம் பயன்படுத்தப்பெற்றுள்ளது. பெருந்துறை நிகழ்ச்சி நடந்து சில காலம் சென்றபின்பும்கூட, அடிகளாரைப் பொறுத்தவரையில் இந்த இறையனுபவம் ஏறியும் இறங்கியும் வருவதும் போவதுமாக இருந்துள்ளது என்பதை முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். இந்த அனுபவம் வந்துவந்துபோன காரணத்தால் 'உண்கின்ற எம்மானே’ என்று நிகழ்காலத்தால் குறிப்பிட்டார். சோதி வடிவினனாகத் தம்முள் புகுந்தான் தம் அடிச் சித்தத்துள் தங்கியுள்ளான் என்று முன்னர்ப் பல பாடல்களில் குறிப்பிட்ட அடிகளார் உயிரை உண்கின்ற செய்தியை எங்கும் பேசியதாகத் தெரியவில்லை. எண்ணப் பதிகத்தில் முதல் மூன்று பாடல்களில் திருவாசகத்தில் வேறெங்கும் காணப்பெறாத இரண்டு செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதாவது பிரியேன்” என்று குருநாதர் சொன்னார் (600) என்பது ஒன்று; எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே’ என்பது மற்றென்று. 'நன்பே அருளாய் என்பது நின் அருள் செம்மையான முறையில் நன்பே எனக்குக்கிட்டுமாறு செய்வாயாக என்னும் பொருளைத் தரும். நன்பே நல்ல வகையில்) 602. பத்து இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே முத்து அணையானே மணி அணையானே முதல்வனே முறையோ என்று எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து, ஆற்றேனே 4