பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86_திருவாசகம் சில சிந்தனைகள் 5 காரணமாக உன்னைப் பார்க்க முடியாமல் ஆகிவிடும்போலும் என்றபடி, 604. பால் திரு நீற்று எம் பரமனைப் பரம் கருணையொடும் எதிர்ந்து தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் போற்றி என் அமுதே என நினைந்து ஏத்திப் புகழ்ந்து அழைத்து அலறி என் உள்ளே ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே 6 பால்போன்ற திருநீற்றை அணிந்த பெருமானே! உன்னை நாடும் அடியார்கள் எதிர்சென்று அவர்களை ஆட்கொள்ளும் ஒளிவடிவானவனே! என் அமுதே என நினைந்து உன்னைப் போற்றி ஏத்திப் புகழ்ந்து அழைத்து அலறி என்னுள் அமைதியடைந்தேன். இந்நிலையில் நீ என் அமைதி நிலைபெறுவதாக" (ஆவ) என்று அருள்வாயாக' என்றபடி, ஆவ என்ற சொல் ததாஸ்து என்ற வடசொல்லின் தமிழாக்கமாகும். அதாவது அங்ங்னமே ஆகுக' என்ற பொருளைத் தருவதாகும்.