பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. யாத்திரைப் பத்து (அனுபவ அதீதம் உரைத்தல்) இப்பதிகத்திற்கு யாத்திரைப் பத்து என்று பெயரிட்டவர்கள் பதிகத்தின் உட்பொருளை நன்கு உணர்ந்துகொண்டே இத்தலைப்பை இட்டுள்ளனர். யாத்திரை என்ற வடசொல் பதினெண் புராண காலங்களில் அதிகம் காணப்பெறும் ஒரு சொல்லாகும். தமிழ்மொழியில் இச்சொல்லைக் காண்பது அரிது. யாத்திரை என்ற சொல்லுக்குப் பயணம் போதல் என்பதே பொருளாகும். திருப்பெருந்துறையில் கோலமார் தரு பொதுவினில் வருக 2-128) என்ற ஆணை பிறந்தது. அந்த ஆணையைப் பின்பற்றி வழியிலுள்ள பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு, தில்லைக்கு வருகிறார் அடிகளார். தில்லைப் பயணத்தின் இறுதியில், இந்த உடம்பைத் துறந்து அவனுடைய திருவடியை அடையும் வாய்ப்பும், அடியாரிடையே அமரும் வாய்ப்பும் கிட்டும் என அடிகளார் நினைந்திருந்தார். திருவாசகத்தில் இன்னும் பல பாடல்கள் பாடப்பெறவேண்டியிருத்தலின், தில்லைக்கூத்தன் இவரை அழைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. தம் எண்ணம் நிறைவேறாமையால் மிகவும் கலக்கமடைந்த அடிகளார். மறுபடியும் தலங்களை வழிபட்டுக்கொண்டு கழுக்குன்றம் அடைகின்றார். குருதரிசனமும் அடியார்கள் தரிசனமும் மறுபடியும் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்த அடிகளாருக்கு, இவ்விரண்டும் எதிர்பாராமல் கழுக்குன்றில் கிடைத்தன. இந்த உடம்போடு இருக்கும்பொழுதே இவை இரண்டும் மறுபடியும் கிட்டவேண்டும் என்று நினைந்த