பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரைப் பத்து-89 605. பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை ஒவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆ ஆ என்னப் பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே 1 இதுவரைக் கண்ட பாடல்களிலிருந்து இப்பாடல் சற்று வித்தியாசமானது. தம்முடைய அனுபவத்தை, தாம் பெற்ற அருட் சிறப்பைத் தன்மை ஒருமையிலும் தன்மைப் பன்மையிலும் கூறிவந்துள்ளார்; ஒரே பாடலில், தன்மை ஒருமையில் தொடங்கித் தன்மைப் பன்மையிலும் முடித்துள்ளார். அந்த இடங்களில், சொல்லளவில் பன்மையாக இருப்பினும், அவற்றைத் தன்மை ஒருமையாகக் கொள்ளவேண்டும் என்று விளக்கியுள்ளோம். ஆனால், யாத்திரைப் பத்தில் நேரிடையாகவே உடனிருந்த அடியார்களை விளித்துப் பாடத்தொடங்குகிறார். 'மலர்மாலை அணிந்தவனும் புய(ஜங்க நடனம் ஆடுபவனும் சிறியோர்களாகிய நம்மை ஒருபொருட்டாக மதித்து, தன்னுடையே கருணை காரணமாக நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்து 'ஆ ஆ என்று ஆச்சரியப்படும்படி ஆட்கொண்டவனும் ஆகிய பெருமானிடத்து ஆட்பட்டவர்களே! இதுவரை இந்தப் பருவுடலோடு இந்த உலகிடைத் தங்கி அவனால் ஆட்கொள்ளப்பெற்று ஆனந்தம் அடைந்தவர்களே! இப்பொழுது நிலையில்லாத இந்த உடம்பை இங்கேயே விட்டுவிட்டு நம்மை உடையவனாகிய அந்தப் பெருமானின் திருவடிகளில் புகுவதற்குரிய காலம் வந்துவிட்டது. உடனே புறப்படச் சித்தமாகுங்கள்’ என்றவாறு.