பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தணிகேசர் துனை

முகவுரை

குருந்தடி யிருந்து மோனக் குருவுருக் கொண்டு பெம்மான்

திருந்தடி சூட்டி யாளச் சிவானந்தப் பரவை மூழ்கி

வருந்தடி யேங்க ளூய்ய வாசக மணியு நல்கிப்

பொருந்தடி யடைந்த ஞானப் புனிதனைப் போற்றி வாழ்வாம்.

-திருவாளொளிபுற்றுார்ப் புராணம்

தேவர் குறளுங் திருகான் மறைமுடிவு

மூவர் தமிழு முனிமொழியுங்-கோவை

திருவா சகமுங் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்.

வள்ளுவர் சீர் அன்பர் மொழி வாசகங்தொல் காப்பியமும்

தெள ளுபரி மேலழகர் செய்தவுரை . ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி யோராறும்

தண்டமிழின் மேலாங் தரம்.

தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளே நீக்கி

அல்லல் அறுத் தானங்தம் ஆக்கியதே எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவா சகமென்னும் தேன்.

தண்டமிழின்மேலாந்தரத்ததாம் திருவாசகம் என்னும் தேனின் இன்பச்சுவை செந்தமிழ் பரவியுள்ள நாட்டில் உள்ளவர்க ளெல்லாம் பருகி அறிந்ததொன்றே.

ஆதலின் அதன் அருமை பெருமையைப்பற்றி ஏதேனும் எழுதுதல் மிகையாகும். திருவாசக ஒளிநெறியையும் அதன் கட்டுரையையும் பற்றி யான் எழுதின வரலாற்றைச் சென்ற ஆண்டு அச்சேறி, வெளிவந்த கட்டுரையின் முகவுரையிற் காணலாகும். மேற்படி கட்டுரை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் முயற்சியால் வெளிவந்தது என்பது அம் முகவுரையால் தெரியலாகும். இப்போது இத் 'திருவாசக ஒளிநெறி' அச்சேறி வெளிவரும் முயற்சியும் பெருமையும் அக் கழகத்திற்கே உரியனவாகும். இந்நூல் வெளிவருவ தற்கு மூலகாரணமாக உள்ளவர் மேற்படி கழகத்தின் ஆட்சியாளராம் திருவாளர். சுப்பையா பிள்ளை அவர்களே. அடுத்த பக்கம்