பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்புமைப் பகுதி 11

5.49 "எட்டினுே டிரண்டும் அறியேனை"

'எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலேன்' -அப்பர் 5-99-3 'எட்டிரண்டும் அறியாத என் செவியில்' திருப்புகழ் 612

5.54 "உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான், பலமா முனிவர் நனிவாடப் பாவியேனப் பணிகொண்டாய்"

'செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன் சேவடி பார்த்திருங் தலச, எம்மனங் குடிகொண் டிருப்பதற்கியானர் என்னுடை அடிமைதான் யாதே' -திரு விசைப்பா 14-6

(5-21 பார்க்க)

5.54 "மலமாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்"

'மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு' அப்பர் 6-12-9

5.57 "ஒருத்திவாய் துடித்தவாறுந் துகிலிறையே சோர்ந்தவாறும் முகங்குறுவேர்த்த பொடித்தவாறு மிவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தனனே"

'சுரிகுழல் மடவார் இளமுலைப் பணைப்பும், துகிலிறை சோர்வதும், நகையும், வரிவிழித்தொழிலுஞ் சேயிதழ்த் துடிப்பும் மனத்திடை யெழுதி வைத்து அழிவேன்'

-கலேசைப் பதிற்றுப் பத்தந்தாதி 72

5.64 "உடல் - நீக்குதல்"

(33-2 பார்க்க)

5.65 "செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண்"

'மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார் குழல்'-சுந்தரர் 7-69.7

5.66 "பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி"

"பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய்ன் நின்றன் கடனன்றே' அப்பர் 6-47-7

(6-6 பார்க்க)

5.71 "புங்கமான போகமே"

'வேறணி புவன போகமே' - திருவிசைப்பா 1.6

5.76 "நினைப்பதாக சிந்தை செல்லும் எல்லை"

'செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை' - திருமந்திரம் 2103 'முருகவேள் பன்னிரு திருமுறை' குறிப்புரை காண்க.