பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி 13

5.99 "முன்ன எம்பிரான்...பின்ன எம்பிரான்"

(7-9 பார்க்க)

"முன்னவன் காண் பின்னவன் காண்" -அப்பர் 6-48-8

"முற்றும் பின்னேயாய் முன்னமே முளைத்தானே" -சுந்தரர் 7.67.9

5.99 "முழுதும் யாவையும் இறுதியுற்ற நாள் பின்ன" 'உலகமெல்லாம் ஒடுங்கிய பின்' -அப்பர் 6-35-2

6.2 "கொவ்வைச் செவ்வாய்"

'கொவ்வைத் துவர் வாயார்' -சுந்தரர் 7-82-3

6.2 "கொள்ளேர் பிளவகலாத் தடங் கொங்கையர்"

(4-84 பார்க்க)

6.3 "ஆற்றங்கரை மரமாய் வேருறு வேனை"

"ஆற்றங்கரையின் மரமும்...... விழுமன்றே" -நல்வழி 18

"ஆறேடு வெள்ளத் ததன் கரையுற்ற அடிமரம் போல்"-திருமுல்லைவாயில் வைணவி எண்ணெழுத்து மாலை 37

"ஒடு புனல் கரையாம் இளமை" சுந்தரர் 7-3-4

6.6 "பொறுப்ப ரன்றே பெரியோர்சிறு நாய்கள் தம் பொய்யினேயே"

"சிறியவர் ஒருபிழை செய்யின் மேலவர், பொறையொடு பின்னரும் போற்றல் அல்லதை, இறையதும் வென்குவரோ" கந்தபுராணம் 3-21-170

"பெரியோர் பொறுப்பான்றே சிறியோர்கள்பிழைத்தனவே" தஞ்சைவாணன் கோவை 397

"சிறியவர் செய்த தீமை புலம்பலர் பொறுப்பான்றே பெரியவர்' சிங்தாமணி 2088

(5-66 பார்க்க)

6.9 "இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து"

"இருதலை மின்னுகின்ற கொள்ளிமேல் எறும்பு என்னுள்ளம்" அப்பர் 4-75.6

'கொள்ளித் தலையில் எறும்பது போல' -கங்தரலங்காரம் *106 "இருதலைக் கொள்ளி யிடை கின்று வருக்தி, ஒருதலைப்படா அ உறவி போன்றனம்' அகநானுறு 339

*உறவி - எறும்பு

6.11 'மனத்தே ஊறும் மட்டே'

'உருகு மனத்தடியவர்கட்கு ஊறுங் தேனே' அப்பர் 6-84.3