பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

МА АР АР திருவாசக ஒளி நெறி (?) இறைவன் அணிந்துள்ள நல்ல * அழகுடைய தன்மையையுடைய செங்கழுநீர் மலர் (மாலை) எனது தலேயில் அணியக் கிடைத்தல் கூடுவதாகும். 49-5 (8) என்னேயாளுடைய பெருமான், அருள் கிறைந்த ஈசன் என் முன் எழுந்தருளப் பெற்ருல் :(1) இப் பூமியில் காரியம் கருதி மாயையால் உண்டாகும் மயக்க உணர்ச்சிகள் உண்டாகா. (2) தேவர்களும் அறியாத இறைவனுடைய மலர் அடியை வணங்குதல் கூடுவதாகும். (8) ஞானக்கண் இல்லாத என்னிடத்தே பல காலமாகச் சேர்ந்துள்ள கலக்கம் நீங்குதல் கூடும். (4) இறைவன்மீது காதல் கொண்ட அடியார்களின் மனம் இப்போது களிப்புறுதல் கூடும். (5) பெண் - அலி - ஆண் என்பதாலும், நாம் என்பதாலும், ஏற்பட்ட தொல்லைகள் ஒழிந்து போகும். (6) பேர்கூடச் சொல்ல முடியாத அநேக பிறப்புக்களினின்றும் தப்பிப் பிழைத்தல் கூடும். (7) எண்ணற்ற சித்திகள் அற்புதச் செயல்கள் என்னிடம் வங்து கூடுவதாகும். 49-6 (8) என்னே முன்னே ஆளுடை ஈசன் என் தந்தை எழுங்தருளப் பெற்ருல் :(1) இறைவனுடைய பொன்போலும் திருமேனியிலுள்ள வெண்ணிற்றின் பொலிவு தோன்றுவதாகும். (2) மாதவர்களின் கைகள் குவிந்து பூவின மழை போலும் பொழிந்து போற்றுவதாகும். (3) மின்போலும் நுண்ணிய இடையை உடைய மாதர்களின் உட்கருத்துக்கள் வெளிப்பட்டு விளங்குவதாகும். (4) வீணேயினின்று (யோக கிலேயில்) எழுகின்ற ஓசை இன்பம் பெருகித் தோன்றும்.

  • அகப்பொருளாக இந்த அடியைக், கொள்க மங்கை காணக் கொடார்மண மாலையைக், கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை, கங்கை மீரிடை மருதரிங் நங்கைக்கே, எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே' என்னும் அப்பர் பாடல் கம் கினேவுக்கு வரும்-அப்பர் 5-15-6

t 19-8-1-ன் கீழ்க்குறிப்பைப் பார்க்க