பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்-உச திருவாசக ஒளிநெறி 4. வயது : இவர் சிவத்தொடு கலங் கபோது வயது முப்பத்திரண்டென்ப. 'அருள் வாதவூரருக்குச் செப்பிய நாலெட்டினிற் றெய்வீகம்'-என்பது பழைய வெண்பா. 5. இவர் பெருமை : நால்வகை நெறிகளுள் இவர் பற்றிய நெறி "டேநெறி (ஞான மார்க்கம்). அம்பலவாண்ரே தமது கையால் இவரருளிய நூல்களை எழுதினர் என்ருல் இவர் பெருமை அளவிடுங் தகையதோ ! 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி. "வாக்குக் கருணகிரி வாதவூரார் கனிவில்" என்பது ஆன்ருேள் திருவாக்கு. அரும்பொருள் அடங்கிய தமிழ் நூல்களுள் திருக்கோவையாரை ஒன்ருக்கிப்'பல்காற் பழகினும் தெரியா உளவேல், தொல்காப்பியம், திருவள்ளுவர் கோவையர்ர் மூன்றினும் முழங்கும்" என்பர் ஈசான தேசிகர். அவரே மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே என்பது திண்ணம்' என்ருர். தமிழ் நூல்களுள் மேலாந்தரத்த நூல்கள் ஆறு என்று கூறித் திருவாசகத்தை அதனுள் ஒன்ருக்கி, " வள்ளுவர்சீ ரன்பர் மொழி வாசகம் தொல்காப் பியமே தெள்ளுபரி மேலழகர் செய்த உரை-ஒள்ளிய சீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி யோராறும் தண்டமிழின் மேலாங் தரம்'-எனக் கூறும் ஒரு பழம் பாடல். 'வாதவூரன்ப பாவெனப் படுவதுன் பாட்டு' எனப் போற்றுவர் சிவப்பிரகாசர். 6. உபதேசப் பொன்மொழி : (1) கமது பிறவி மாயப் பிறவியாதலின் இறைவர் மாட்டே அதை ஒப்படைத்தல்வேண்டும் என்பது இவரது பொன்மொழி. மாயப்பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கு மதுவன்றி ஆயக்கடவேன் கானேதான், என்னதே இங்கதிகாரம்' (குழைத்த பத்து.) (2) இறைவர் திருவருள் கூடும்- கிலே ைபக் காணும் வழியைக் 'காயத்துள் அமுதுாறவூற கண்டு கொள்” (சென்னிப்பத்து) என I விளக்கியுள்ளார். 7. இவர் முத்தியடைந்த திருநட்சத்திரம் :-ஆனி மகம். 'ஆனிமா மகத்தில் அங்க முத்தமிழ் வாதவூரர்...... கயிலே சேர்ந்தார்." o