பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/730

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது. 2. திருவாசகம்-ஒரு முத்தமிழ் அால் அசு கடன ஆண்டவன் தமக்கருளிய பல செயல்களே கினேத்தும், அவர் தமது ங்ெகனையைத் தெளிவித்துச் சிவமாக்கித் தம்மை யாண்ட அந்தமிலா ஆணங்கத்தைக் கூறியும் மகிழுங் காட்சி ஒருபால்; தம்மை அடியாரொடும் இறைவன் கூட்டிய அற்புதம் எத்தகைத்து வன அறியேன் என வியந்து கூறி அவர் மகிழும் காட்சி ஒருபால்; "இதோ! இறைவன் மூல பண்டாரம் வழங்குகின்ருன் வந்து முந்துமின்' என உலகோரை அவர் அழைக்கும் காட்சி ஒருபால்; “அடியார்களே! சிவபுரத்துக் கதவம் அடைபடுமுன் நாம் போவோம் வாருங்கள் ! காலம் தாழ்த்திப் போனல் பெருமான் பெறுதற்கு அரியன். ஆதலால் திருக்கதவம் திறந்தபோதே நாம் சென்று அவர் திருத்தாளைச் சேர்வோமாக ' என அடியார்களே அவர் அழைக்கும் காட்சி ஒருபால்: - இறைவன் தமக்கருளிய பேற்றை வேறு யார் பெறக்கூடும் எனப் பெருமிதத்துடன் கூறி மகிழும் காட்சி ஒருபால்; இவ்வாறு பலவகைக் காட்சிகளே விளக்கி, எவ்வாறு கட்டுகள் (பந்தங்கள்) நீங்கப்பெற்று வீடுபேற்றுக்குத் தாம் உரியவராளுர் என்பதை விளக்குவதால் மணிவாசகருடைய வாழ்க்கையே ஒரு மெய்க் நாடகமாக விளக்கங் தருவதாகும் இத்திருவாசகமென்னும் தெய்வ மணி நூல். - மேற்கூறிய பல்வகைக்_காட்சிகளுள் தந்ததுன் தன்னே என்னும் கோயில் திருப்பதிகம் இறுதிப் பாடலில் மணிவாசகர் இறைவனுட்ன் அசதி ஆடலானது யாவரும் வியக்கும் தலைசிறந்ததொரு கர்ட்சியாகப் பொலிகின்றது. மணிவாசகருடைய நாடக வெற்றிப் பாடல் இதுவே. முடிவுரை • மேற்கூறியவற்ருல் திருவாசகம் ஒரு முத்தமிழ் நால் என்றும், மணிவாசகர் ஒரு முத்தமிழ் விரகர் என்பதும் ஒருவாறு புலப்படும். திருவாசகம் ஒரு முத்தமிழ் நூல் ஆகாதா என்னும் ஆசையை இறைவன் மனத்தில் துாண்ட, அது காரணமாக எழுங்ததாகும்.இக்கட்டுரை. இசை ஞானம் இல்லாத நான் ஏதோ ஒருவகையாக ஆய்ந்து இதை எழுதியுள்ளேன்! -- ն