பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விTசு திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (1) அந்தணர் அழல் ஒம்பும் இடம் திருக்களங்தை ஆதித்தேச்சரம். (2 தேவியைப் பாகம் கொண்டவர் இடம் களங்தை ஆதித்தேச்சரம். (3) மாடங்களில் மறையவர் கடல் முழக்கம் போல மறை ஒதும் இடம் திருக்களங்தை ஆதித்தேச்சரம். (4) கம்மை ஆள விரும்பி, திரு அருள் புரிந்த பெருமானிடம் களங்தை ஆதித்தேச்சரம் என்கின்ருர் கருவூரா. (5) தம்குடி முழுதாளும் பெருமானிடம் களங்தை ஆதித்தேச்சரம். (6: "அந்தண் ர்ேக் களங்தை' 'அலை புனற் களங்தை' "ரேணங்க சும்பு கழனி சூழ் களங்தை" எனக் 'களந்தை" ஊர் விளக்கப்பட்டுள்ளது. 10. காழி (சீகாழி (வைப்புத்தலம்) (1) காழிச் சம்பந்தரை இறைவன் ஆட்கொண்டது கூறப்பட்டுள்ளது. 11. திருக் கீழ்க்கோட்ர்ே 'மணி அம்பலம் கோட்டுர் :-இத்தலம் திருத்தருப்பூண்டி புகைவண்டி கிலேயத்துக்கு வடமேற்கில் 9 மைலிலும், மன்னர்குடி புகைவண்டி கிலேயத்துக்குத் தென் கிழக்கில் 10 மைலிலும் உள்ளது. திருக்கோட்டுரில் மேற்கில் உள்ள திருக்கோயில் தேவாரம் பெற்றது; கிழக்கில் உள்ள திருக்கோயில் 'திரு இசைப்பா' பெற்றது. இதுதான் கீழ்க்கோட்டுர் மணி அம்பலம். ஐராவதத்தின் மணி விழுந்த இடம் ஆதலின் 'மணி அம்பலம்" என்ப் பெயர் போந்தது. (1) தெருவில் உயர்ந்த மாடங்களில் மாதர்களின் ஒலி கேட்கின்ற கீழ்க்கோட்டுர்,

  • கீழ்க்கோட்டுர் பதிகம் தலைவனிடம் காதல் கொண்ட தலைவியின் கூற்ருக அமைந்துள்ளது.