பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன.அ திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை (5) சாட்டியக்குடி ஈசனுக்கு அந்தணர்கள் கிகள் சொரிந்து வளர்க்கின்ற ஒமத்தியே விளக்கு ஆகும். (6) சாட்டியக்குடியாருக்கு இன்பராய் இனிய கிங் கனியாய் விளங்குபவர் ஏழிருக்கை இருக்கும் சசர். (7) சாட்டியக்குடியார் சட்டிய (சம்பாதித்த) பொருளாய் விளங்குபவர் ஏழிருக்கை ஈசர். (8) நான்கு மறை நூல் சகலமுங் கற்ற சாட்டியக்குடியில் உள்ளாருடைய நாயகன் ஈசன். 13. சிவபுரம் (வைப்புத்தலம் 4) இத்தலம் கயிலாயம், அல்லது சிவபுரம் என்னும் தேவாரம் பெற்ற தலம். இது கும்பகோணத்திற்கு 3 மைல் அாரத்தில் உள்ளது. சிவபுர நகருள் வீற்றிருக்கும் அங்கணர் பெருமான். 14. செப்புறை (வைப்புத்தலம் 5) சிவனடியார்க்கு அடியனுவான் செப்புறைச் சேந்தன். 15. தஞ்சை இராசராசேச்சரம் இத்தலம் தஞ்சாவூர்; சோழ நாட்டுத் தலைநகர். முதலாம் இராசசாசசோழன் (கி. பி. 985-1004) கட்டிய சிவாலயமே தஞ்சை இராசராசேச்சரம்” எனப் பெயர் பெறும். ஏனேய விவரங்கள் ஒளிநெறியிற் காண்க. (1) பலவிதமான படைகள் (ஆயுதங்கள்) அமைக்கப் பெற்ற உயரிய மாடங்களும் இலேபோன்ற மதிலுறுப்புக்கள் பொருந்திய உள்மேடையோடு கூடிய மதில்களால் சூழப் பெற்றது தஞ்சை, (2) கடல்போல் ஒலிக்கின்ற பெரிய தெருவில் அரச யானேகளின் கூட்டம் உலாவுகின்றதும் மலேயைப் போல உள்ள மதில்களால் சூழ்ந்ததுமான தஞ்சை. (3) அகில் கமழும் மானிகையில் மகளிர் யாழொலி ஒலிக்கும் தஞ்சை.