பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறிக் கட்டுரை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ն/aո திருஇசைப்பா ஒளிநெறிக் கட்டுரை இவ்வாறெல்லாம் சொல்லி வெண்ணிற்றை உடில் முழுதும் பூசி, நீலகண்டப் பெருமானுடைய புகழைச் சொல்லிக் கொண்டு இவள் பெரிய தெருக்களில் எல்லாம் திரிந்து கொண்டு இருக்கின்ருள் (8-10). என்று தாய் தன் மகளைப் பற்றிக் கூறினுள் என்னும். பதிகம் 6. சேந்தனர் திருஆவடுதுறை இப்பதிகம் தலைவன் பால் அன்பு கொண்ட தலைவியின் அயரங் கண்டு தாய் இரங்கிக்கூறியது 6-1. ஐயா! திரு ஆவடுதுறை அமுதே ? என்று என் பெண் உன்னே அழைத்தக்கால் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருப்பது அழகாமோ? (அழகாகாது.) 6-2. ஆவடுதுறை நம்பிகொண்டுள்ள .ே தி ைய அறியாதவளாய் அவருடைய தோளத் தழுவ கினைக்கின்ருள் (என்மகள்). -ே3. சடையில் உள்ள கொன்றையைப்பற்றித் தனது விருப்பத்தை எடுத்துப் பேசுவாள் தனது மனதுக்கு இன்ப வெள்ளம் என்று கூறுவாள்; சாந்தையூருக்கு இன்பம் தருபவர் ஆவடுதுறைப்பெருமான் எனக் கூறுவாள் (என். மகள்). 6.4. திரு ஆவடுதுறை இறைவனே! (என் மகள்) விஷயத்தில் மட்டும் உன் மனம் இரங்காமல் இருப்பது என்ன காரணம் ? 6. 5. திருற்ேறை அணிவதும், ஐந்தெழுத்தைச் செபிப்பதும் அல்லாமல் வேருெரு காரியமும் செய்யாதவளாய் இருக்கின்ருள். இதற்கு (நான்) என்ன செய்வேன் ? 6.6. திரு ஆவடுதுறை இறைவனுடைய செய்கையை யார் அறியவல்லவர் இந்தப் பெண்ணுக்குக் கதியருள்' என்று கூறுவாள். 6.7. "கல் போன்ற என் மனத்தைக் கனிவித்த எம் கருணுலயா'! நீ என் மகள் கூறியதைக் கேட்டும (வாய்) பேசாமல் சும்மா இருப்பது அழகோ (அழகாகாது.)